நாடு போற்றும் நான்காண்டு ஆட்சியின் சாதனை.. பஸ் நிறுத்தத்தில் படகு நிற்கிறது!

Boat has been halt in bus stops in ChennaiOneIndia News : சென்னை: பஸ் நிற்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் படகு நிற்கும் அவல நிலை உருவாகியுள்ள நிலையில் அந்த பஸ் நிலையத்தில், நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி என்று, அரசு வைத்துள்ள விளம்பரம், மக்களின் முகத்தை சுளிக்க வைத்துள்ளது. மழை வெள்ளம் வழிந்தோட வழியின்றி, ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமிக்கவிட்டதன் விளைவாக இன்று பெரு வெள்ளத்தால் சென்னை தத்தளிக்கிறது என்பது நிபுணர்கள் கருத்து.

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரத்தில், படகு வைத்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அப்படி, மீட்புக்காக கொண்டு வரப்பட்ட ஒரு படகு, பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பஸ் நிலையத்திலோ, மாநில, அரசு சார்பில் வைக்கப்பட்ட விளம்பரம் இப்படி சொல்கிறது, "நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி, என்றும் அம்மாவின் ஆட்சி". ஒருவேளை, பஸ் நிறுத்தத்தில் படகை நிறுத்திய 'புரட்சியை'த்தான் இப்படி தொலை நோக்கோடு புகழ்ந்திருப்பார்களோ?

Comments