கவுன்சிலரே வரலை... நீங்க எதுக்கு வந்தீங்க... அமைச்சர் வளர்மதியை துரத்தியடித்த மக்கள்



அமைச்சர் வளர்மதி மக்களை சந்திக்கமுடியாமல் துரத்தப்படுகிறார்... இடம் எம்.ஜி.ஆர் நகர்... படம் பிடித்த என்னை மிரட்டுகிறார்கள்...
Posted by Murugan Tvmalai on Sunday, December 6, 2015

சென்னை: சென்னையில் ஆர்.கே.நகரைத் தொடர்ந்து பல பகுதிகளில் தாமதமாக வெறுங்கையோடு ஆறுதல் சொல்ல வந்த அமைச்சர்களை துரத்தியடிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அமைச்சர் வளர்மதியை தடுத்து நிறுத்து பொதுமக்கள் விரட்டியடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக ஓடுகிறது. வரலாறு காணாத பெருமழை வெள்ளம் சென்னையை மூழ்கடித்தது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் பல லட்சம் மக்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி அகதிகளாகிப் போயினர்.

இதன் பின்னரும் உரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ளவில்லை. இதனால் மக்கள் உச்சகட்ட கொந்தளிப்புக்குள்ளாகினர். இதன் வெளிப்பாடாக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதிக்குப் போன அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, செல்லூர் ராஜூ மக்கள் 'கெரோ' செய்து விரட்டியடித்தனர். இதேநிலைமை எம்.ஜி.ஆர். நகரில் பொதுமக்களை சந்திக்க சென்ற அமைச்சர் வளர்மதிக்கும் ஏற்பட்டுள்ளது. அவர் பொதுமக்களை பார்க்க சென்ற போது, கவுன்சிலரே எட்டிப் பார்க்கலை.. நீங்க எதுக்கு வந்தீங்க... மக்களை பார்க்க முடியாது போங்க என்று பொதுமக்கள் கோரஷாக குரல் எழுப்பினர். இதனால் வெறுத்துப் போன முகத்துடன் வேகம் வேகமாக அந்த இடத்தை வெளியே வளர்மதி வெளியேறுகிறார்.. இந்த வீடியோ காட்சி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Comments