தினமலர் செய்தி : சென்னை: கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், தலைமைச்செயலாளர் ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆவின் செயலாளர் விஜயகுமார், போக்குவரத்து கூடுதல் செயலாளர் பிரபாகர ராவ், பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, பத்திரிகையாளர்கள் வெள்ளத்திற்கான காரணம், ஆக்கிரமிப்பு, பலி மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து சராமரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். இதனையடுத்து , மழை நிவாரண பணிகளில்ஈடுபட உள்ளதாக கூறி, நன்றி தெரிவித்து கூட்டத்தை முடித்துக்கொண்டனர்.
Comments