OneIndia News : டெல்லி: அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் ராத்தோர் கூறுகையில், "அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர தமிழக பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் உள்ளிட்ட தெற்கு பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்பிறகு மழை தாக்கம் குறையும். இருப்பினும், மழை முற்றாக நிற்காது. 6 நாட்களாவது மழையின் தாக்கம் தொடரும்". இவ்வாறு அவர் தெரிவித்தார். அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
Comments