கடந்த சில நாட்களாக பெங்களூரில் மழை பெய்துவந்ததும், ஈரப்பத வானிலையும் இந்த முடிவுக்கு காரணம் என்று தெரிகிறது. இந்திய அணியில் அமித் மிஸ்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, பதிலாக, இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில், டேல் ஸ்டெயின், வெர்னான் பிளான்டர், சிமன் ஹார்மர் ஆகியோர் விலகியுள்ள நிலையில், டுமினி, மோர்கல், கெய்ல் அப்பார்ட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் இன்னிங்சில், 59 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி, நண்பகல் தாண்டுவதற்குள், 214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 100வது டெஸ்ட் போட்டியில் ஆடும், தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர், டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். இந்திய தரப்பில், அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வருண் ஆரோன் 1 விக்கெட்டை வீழ்த்தினார். அப்பாட் ரன்-அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து, இந்திய அணி, தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
Comments