ஜார்கண்ட்டில் பா.ஜ., ஆட்சி ; காஷ்மீரில் இழுபறி நிலை நீடிப்பு

தினமலர் செய்தி : ராஞ்சி : ஜார்கண்ட், காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகளில், கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது போல் , காஷ்மீரில் ஆளும் மாநில முதல்வர் ஒமர் கட்சிக்கு இந்த தேர்தலில் பின்னடைவே கிடைத்துள்ளது. ஜார்கண்ட்டில் முதன் முறையாக பா.ஜ., ஆட்சி  மலரும் நிலை உருவாகியுள்ளது.


சமீபத்திய வெள்ளத்தில் சரியான நிவாரணம் வழங்காதது, பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல் ஆகியவற்றால் காஷ்மீர் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளதாகவும், இதனால் ஒமர் அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் மீடியாக்கள் மூலம் செய்திகள் வெளியானது.
இரு மாநில தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை முதல் , எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஜார்கண்ட் மொத்தம் 81 தொகுதிகளில் பா.ஜ., 40 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 20 இடங்களிலும் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஏறக்குறைய இங்கு பா.ஜ., ஆட்சி அமைக்கும் நிலையே நிலவுகிறது. ஜம்மு -காஷ்மீரை பொறுத்தவரையில் , பா.ஜ., 24, மக்கள் ஜனநாயக கட்சி 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் , ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 16 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Comments