நிலையான ஆட்சியே குறிக்கோள் ; அமித்ஷா மகிழ்ச்சி பேட்டி

தினமலர் செய்தி : புதுடில்லி: டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, 'காஷ்மீரை பொறுத்த வரையில் அங்கு நிலையான ஆட்சி என்பதே எங்களின் குறிக்கோள். காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேவையான அனைத்து திட்டங்களுக்கும் தயாராக உள்ளோம். அதேவேளையில், எதிர்கட்சி வரிசையில் அமரவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். வேறு கட்சி ஆட்சி அமைக்க ஆதரவும் கொடுப்போம்,' என்றார்.


தேர்தல் முடிவுகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: ,
பா.ஜ., வெற்றி குறித்து மகிழ்ச்சியடைகிறேன். காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடியின் பிரசாரமே காரணம். இந்த வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள். நாங்கள் தான் ஜார்கண்ட்டில் ஆட்சி அமைப்போம் என்று உறுதி கூறுகிறேன். ஜார்கண்ட்டில் முதன் முறையாக ஒரு நிலையான அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

'ஜம்மு காஷ்மீரில் கிடைத்துள்ள வெற்றியின் மூலம், அங்கு பா.ஜ., நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது என்பது தெரிகிறது. ஒரு முக்கியமான கட்சியாக அங்கு பா.ஜ., உருவெடுத்துள்ளது,. பிரதமர் நரேந்திரமோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் வெற்றிகள் பிரதிபலிக்கின்றன' இவ்வாறு அவர் தெரிவித்தார். பா..ஜ., தலைமை அலுவலகத்தில் அமித்ஷா வருகையின் போது தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Comments