பா.ஜ., அரசின் ' யு டர்ன் ' செயல்; ராகுல் தலைமையில் போராட்டம்


தினமலர் செய்தி : புதுடில்லி: மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் நிலையை கண்டித்து காங்கிரசார் அக்கட்சி துணை தலைவர் ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பா.ஜ., அரசின் ' யு டர்ன் ' அம்பலம் என வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி வந்தனர். பா.ஜ., அரசு அரியணையில் அமர்ந்து 6 மாதங்கள் ஆகிறது. இந்த 180 நாட்களில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காங்., குற்றம் சாட்டுகிறது.
இது தொடர்பாக கறுப்பு பணம் மீட்பு, விலைவாசி குறைப்பு, உள்ளிட்ட விஷயங்களில் பா.ஜ., அரசின் செயலற்ற தன்மையை பட்டியலிட்டு காங்., செய்தி தொடர்பாளர் அஜய்மக்கான் கையேடு வெளியிட்டார். இதனை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக ராகுல் தலைமையில் காங்கிரசார் பார்லி.,யில் கூடினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொய்யான வாக்குறுதிகள் ; ராகுல் - இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும், பார்லி., கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற ராகுல் நிருபர்களிடம் பேசுகையில் கறுப்பு பணம் மட்டுமல்ல, மத்திய அரசு என்ன வாக்குறுதிகள் கொடுத்தனவோ எதையும் நிறைவேற்றவில்லை என்றார்.

Comments