இந்த, 18 தொகுதிகளில் போட்டியிடும், 175 வேட்பாளர்களில், 55 பேர் கோடீஸ்வரர்கள், 28 பேர், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள்.ஜம்மு
- காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில், நவம்பர் 25ம் தேதி முதல்,
இம்மாதம், 20ம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக, சட்டசபை தேர்தல் நடக்கிறது.
முதற்கட்ட தேர்தல், கடந்த 25ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று,
இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. ஜம்மு - காஷ்மீரில், இரண்டாம் கட்ட
தேர்தலில், 18 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில்,
175 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில், 97 பேர், அதாவது, 50
சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பட்டப்படிப்புக்கும் குறைவாக படித்தவர்கள்.
ஒன்பது பேர், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். ஒன்பது பேர்,
எதுவுமே படிக்காதவர்கள். 28 பேர், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள்;
ஒன்பது பேர் பெண்கள். இன்றைய தேர்தல் களத்தை சந்திக்கும் மொத்த
வேட்பாளர்களில், 55 பேர், அதாவது, 31 சதவீதத்தினர், கோடீஸ்வரர்கள். இவர்கள்
அனைவருக்கும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது. கோடீஸ்வர
வேட்பாளர்களில் முதலிடம் பிடிப்பவர், கூல் அமாஸ் தொகுதியில், பா.ஜ.,
சார்பில் போட்டியிடும் குல்தீப் ராஜ் துபே. இவருக்கு, 14 கோடி ரூபாய்
அளவுக்கு சொத்துகள் உள்ளன. இதுதவிர, வேறு ஐந்து பேருக்கு, 10 கோடிக்கு மேல்
சொத்துகள் உள்ளன. அதே நேரத்தில், 11 வேட்பாளர்கள், தங்களுக்கு சொத்துகள்
எதுவும் இல்லை என, தெரிவித்துள்ளனர்.
20 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு:
ஜார்கண்ட் மாநிலத்தில், மொத்தம் உள்ள, 81 தொகுதிகளில், முதல் கட்டமாக, 13 தொகுதிகளுக்கு, கடந்த, 25ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக, 20 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஜார்கண்ட் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்கள், பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Comments