சட்டசபையை கூட்ட வேண்டும் : ஸ்டாலின் கோரிக்கை

தினமலர் செய்தி : சென்னை : 'துாக்கு தண்டனையிலிருந்து, தமிழக மீனவர்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற, சட்டசபையை கூட்ட வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பான, அவரது அறிக்கை:
அக்டோபர் மாதம் கூட்டப்படும் குளிர்காலத் தொடர், இந்த ஆண்டு நடைபெறவில்லை. தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு, பொய் காரணம் கூறி, இலங்கை அரசு, துாக்கு தண்டனை விதித்து, அதைக் கண்டித்து, தமிழக அரசு சார்பிலும், அனைத்து கட்சிகள் சார்பிலும், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்த தண்டனையை கண்டித்து, தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். எனவே, தமிழக சட்டசபையை கூட்டி, தமிழக மீனவர்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Comments