பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. வைகை அணை நீர் பிடிப்பு பகுதியான வருஷநாடு மலைப்பகுதியில் இருந்து நீர் வரத்து இல்லாத போதும் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து செப்., 5ல் 52.13 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் இரு போக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. வினாடிக்கு 900 கன அடி வீதம் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர் வெளியேறியதால் செப்., 23ல் நீர் மட்டம் 44.54 அடியாக குறைந்தது. இதே நேரத்தில் சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் ஐந்து நாட்கள் திறந்து விடப்பட்டது. இதனால் நீர் மட்டம் மேலும் குறைந்து செப்., 29ல் 40.78 அடியானது. சில நாட்களாக பெரியாறு, வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வருஷநாடு மலைப்பகுதியில் இருந்து வைகை அணைக்கான நீர் வரத்து இன்னும் ஏற்படவில்லை. பெரியாறு அணையில் திறக்கப்படும் நீர், தேனி, போடி பகுதிகளில் பெய்யும் மழைநீர் இவற்றால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று அணை நீர் மட்டம் 43.01(மொத்த உயரம் 71 அடி) அடியாக இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 1650 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடியும், மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீருக்கு வினாடிக்கு 60 கன அடியும் தொடர்ந்து வெளியேறுகிறது. அணையின் நீர் இருப்பு 1206 மில்லியன் கன அடி.

Comments