பார்லி வளாகத்தில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் உண்ணாவிரதம்

புதுடில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் நேற்று, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலை முன், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால், நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க., எம்.பி.,க்கள் உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதம், மாலை, 5:00 மணி வரை நடந்தது.

Comments