வடகிழக்கு பருவமழை நெருங்கும் சூழலில், கடலோர மாவட்டங்களில், மின்
வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, பழுதடைந்த மின் கம்பம்,
டிரான்ஸ்பார்மர்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது.
100 க்கும் மேற்பட்ட...:
தமிழகத்தில்,
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை,
திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை,
கன்னியாகுமரி ஆகிய, 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும்,
100க்கும் மேற் பட்ட, கிராமங்கள், கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளன.
மின்வாரியம் சார்பில், கடலோர மாவட்டங்களில் உள்ள, மின் இணைப்புகளுக்கு,
மின் கம்பங்கள் வாயிலாக, டிரான்ஸ்பார்மர் மூலம், மின் வினியோகம்
செய்யப்படுகிறது. பருவமழைக் காலங்களில், கனமழை அல்லது புயல் ஏற்பட்டால்,
மின் கம்பங்கள், எளிதில், சாய்ந்து விடுகின்றன. இதனால், மின் வினியோகம்
பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, சில ஆண்டு களுக்கு முன், 'தானே, நிலம்'
புயலின் போது, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில்,
பெரும்பாலான மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்து விட்டதால், மின்
வினியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. எனவே, தற்போது, தென்மேற்கு
பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த மாதம், வட கிழக்கு
பருவமழை துவங்க உள்ளது. மழையினால் பாதிப்பு அதிகரிப்பதற்கு முன், கடலோர மாவட்டங்களில், பழுதடைந்துள்ள மின் கம்பம், டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, கடலோர பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். அவர்கள், கடலோர கிராமங்களில், மின்வாரிய வளர்ச்சிப்பணிகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும், மின் தடை ஏற்பட்டால் விரைவில் சீரமைப்பதில்லை. மேலும், பழுதடைந்த கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் மாற்றப்படுவதில்லை என்றும், புகார் தெரிவிக்கின்றனர்.
ரூ.360 கோடி...:
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடலோர மாவட்டங்களில், 'கேபிள்' மூலம், மின் வினியோகம் செய்ய, உலக வங்கி, 360 கோடி ரூபாய் நிதி வழங்க முன் வந்துள்ளது. இதனால், 'கேபிள்' பதிக்கும், பணி விரைவில் துவங்கும்.கடலோரங்களில், மழையின் போது, எடுக்க வேண்டிய, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அங்குள்ள பொறியாளர்களுக்கு, முன் கூட்டியே, அறிவுறுத்தப்பட்டு, கூடுதல், உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
Comments