புதுடில்லி: மோடியை கடலில் தள்ள வேண்டும் என முன்னாள் மத்திய
அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "பெண்கள்,
தங்களால் நாட்டு மக்களுக்காக உழைக்க முடியும் என நிரூபித்துள்ளனர். அவர்களை
நாம் காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்தால், நாளையே, பிரதமர் நரேந்திர
மோடியை குஜராத்துக்கு திருப்பி அனுப்பி வைத்து விடலாம். அப்படியே யாராவது
அவரை கடலில் தள்ளிவிட்டால், அவர்களை நான் மிகவும் பாராட்டுவேன்" என்று
தெரிவித்தார். மணிசங்கரின் இந்த கமெண்ட்டுக்கு பதிலளித்துள்ள பா.ஜ., செய்தி
தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன், மணி சங்கரின் பேச்சு, காங்கிரஸ் கட்சி கடலில்
மூழ்கி வருவதையே காட்டுகிறது. ஏற்கனவே மணி சங்கரின் இது போன்ற பேச்சுக்கள்
தான், சாதாரண டீக்கடைக்காரரை பிரதமராக்க உதவியது என்று கூறியுள்ளார்.
Comments