நள்ளிரவில் பாக்.பார்லி. முற்றுகை: ராணுவம் குவிக்கப்பட்டதால் பதறறம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக ,இம்ரான் கான் கட்சியினர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் பார்லி. முற்றுகை போராட்டம் நடத்தினார். ராணுவம் குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றமும்,பரபரப்பும் ஏற்பட்டது.

பாகிஸ்தானில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்நடந்த பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றது. அக்கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் நவாஸ்ஷெரீப் ஆட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ,தகிரிக் இல்- இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான், மதகுரு தகிர் -உல்- குவாதிர் ஆகியோர் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாட்டில் மோசமான ஆட்சி நடத்தும் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், உடனடியாக பொதுத்தேர்தலை நடத்திட வேண்டும் வலியுறுத்தி வந்தனர்.

நள்ளிரவில் பார்லி. முற்றுகை

நேற்று நள்ளிரவில் இம்ரான் கட்சியினர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இம்ரான் கான் தலைமையில் மெகா பேரணி நடத்தினர்.இவர்கள் பார்லி.யை நோக்கி முற்றுகையிட்டனர். இதையடுத்து அசம்பாவித சம்பவங்களை தடுக்க 45 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

ராணுவம் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பும் பதற்றறும் ஏற்பட்டது. இது குறித்து அமைச்சர் ஒருவர் கூறுகையில், போராட்டம் என்ற பெயரில் பெண்கள்,குழந்தைகளை மனித கேடயமாக பய்படுத்தி உள்ளனர். மனிதாபிமான முறையில் அவர்களை நடத்திட ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

பதவி விலகமாட்டேன்: ஷெரீப்

நள்ளிரவு போராட்டம் குறித்து பிரதமர் நவாஸ் ஷெரீப்கூறுகையில், அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறுஅழைத்துள்ளேன். இதற்காக நான் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

எதிர்க்கட்சியினர் இந்த போராட்டத்தால் நவாஸ்ஷெரீப் அரசுக்கு நெருகடி ஏற்பட்டுள்ளது.மற்றொரு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இம்ரான் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

Comments