அமித்ஷாவின் புதிய படை பரிவாரம் ; பா.ஜ., தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு

புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அமித்ஷா தனது படை தளபதிகளை அறிவித்தார். இதில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் மத்திய அமைச்சர் மகன் வருண்காந்தி பொதுசெயலர் பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இவருக்கு கட்சியில் வேறு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
தமிழகத்தை சேர்ந்த எச். ராஜா தேசிய செயலராகவும், லலிதாகுமாரமங்கலம் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பார்லி., தேர்தலில் பா.ஜ., வெற்றிக்கு முழுக்காரணமாக இருந்தவர் அமித்ஷா என்றும் இவரே மேன் ஆப் தி மேட்ச் என்றும் பிரதமர் மோடி இவரை வெகுவாக பாராட்டினார். இவரது கட்சி தலைமை பொறுப்பு கடந்த வாரத்தில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
இவரது தலைமையில் தேசிய நிர்வாகிகள் குறித்தை அறிவிப்பை அமித்ஷா வெளியிட்டுள்ளார். இதன்படி இவரது படையில் 11 துணை தலைவர்கள் 8 பொது செயலர்கள் , 10 செய்தி தொடர்பாளர்கள், 14 தேசிய செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் எடியூரப்பா, சத்யபால் மாலிக், முக்தர்அப்பாஸ் நக்வி, பண்டாரு தத்தாத்ரேயா, வினய் சகாஸ்ராபுதே துணை தலைவர்களாகவும், ராம் மாதவ், ஜே.பி. நட்டா, ராஜிவ் பிரதாப் ரூடி, , பொதுசெயலர்களாகவும், அனுராக் தாக்கூர், பா.ஜ., இளைஞரணி தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த எச். ராஜா : மேலும் எச். ராஜா, லலிதாகுமாரமங்கலம் புருசோத்தம் ரூபாலா, நரசிம்மராவ், விஜய் எம்.ஜே.அக்பர், மீனாட்சி லெகி, ஷாநவாஸ் உசேன், பட்ரா, துதன்சு திரிவேதி, பூபேந்திரயாதவ், ராம்சங்கர் கத்தாரியா, ராம்லால், ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நிர்வாகிகள் அனைவரும் எதிர்வரும் 4 மாநில சட்டசபை தேர்தலில் முக்கிய பங்காற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments