இந்தியாவுடன் உறவு: நவாஸ் ஷெரீப் வருத்தம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் சுமூகமான உறவை பாகிஸ்தான் ஏற்படுத்திக் கொள்ளாததற்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் வருத்தம் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நடந்த பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள உறவு திருப்திகரமாக இல்லை. குறிப்பாக இந்தியாவுடன் நாம் சுமூக உறவை பராமரிக்கவில்லை. இந்நிலையில், தற்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான காலம் வந்துள்ளது. இவ்வாறு ஷெரீப் பேசினார். இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், மாகாண முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், பாக்., ராணுவ தளபதி ரகீல் ஷெரீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments