16 கண் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை

மேட்டூர்: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு 16 கண் பாலத்தில் நாளை முதல் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவி்த்துள்ளார். மேலும் கரையோரங்களில் வசித்து வரும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments