ஈரோடு: கர்ப்பப்பை இல்லாத பெண்ணுக்கு, வாடகை தாய் முறையில், தமிழகத்தில், இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு டாக்டர்கள் தனபாக்கியம், பிரதீபா கூறியதாவது: பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல், சினைப்பையுடன் இருப்பதற்கு, எம்.ஆர்.கே.எச்.சின்ரோம் என்று பெயர். ஆங்கிலத்தில், "மேயர் ரோக்கி டான்ஸ்கி குஷ்தர் ஹாசர் சின்ரோம்' என்பர். 5,000 பெண்களில், ஒருவருக்கு இப்பிரச்னை இருக்கும்.
ஈரோடு டாக்டர்கள் தனபாக்கியம், பிரதீபா கூறியதாவது: பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல், சினைப்பையுடன் இருப்பதற்கு, எம்.ஆர்.கே.எச்.சின்ரோம் என்று பெயர். ஆங்கிலத்தில், "மேயர் ரோக்கி டான்ஸ்கி குஷ்தர் ஹாசர் சின்ரோம்' என்பர். 5,000 பெண்களில், ஒருவருக்கு இப்பிரச்னை இருக்கும்.
இது பெண்கள், உரிய பருவத்தில் பூப்படையாமல் இருக்க, முக்கிய காரணமாக அமைகிறது. பெண்களுக்கு உரிய, மரபணுக்களே இருக்கும் சினைப்பையில் இருந்து வரும் ஹார்மோன்களும், கருமுட்டை வெளியேறுவதும் மற்ற பெண்களை போல் இருக்கும். தாய்க்கு கர்ப்பப்பை இல்லாததால், குழந்தையை சுமப்பது இயலாத காரியம். டெஸ்ட் டியூப் பேபி முறையில் மட்டும் வாடகை தாய் கொண்டு, குழந்தை பிறக்க செய்ய முடியும். திருமணமாகி, மூன்று ஆண்டு குழந்தை இல்லாத தம்பதியினர், கடந்த, ஏப்., 16ம் தேதி பரிசோதனைக்கு எங்களிடம் வந்தனர். ஸ்கேன் செய்தபோது, கர்ப்பப்பை இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இரு சினை முட்டைகளும், நல்ல திறனுடன் செயல்பட்டு வந்ததை, ரத்த ஹார்மோன் மூலமும், முட்டை மாதாந்திர வெடிப்பின் மூலமும் உறுதி செய்யப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த, 30 வயது இளம்பெண் சம்மதித்ததால், 2013 மே மாதத்தில் வாடகை தாயின் கர்ப்பப்பையில், கருமுளைகள் செலுத்தப்பட்டன. மீதி கருமுளைகள் உறைநிலையில் பதப்படுத்தபட்டன. முன்னதாக கர்ப்பப்பை இல்லாத பெண்ணின் முட்டைகளை, ஹார்மோன் ஊசி மூலம் வளர்க்கப்பட்டது. இம்மாதிரி பெண்களுக்கு, பெண் உறுப்பு வளர்ச்சி அடையாமல் இருப்பதால், அவ்வழியே முட்டை எடுப்பது சிரமமாகும். எனினும், வெஜைனல் ஸ்கேன் உதவியுடன், முட்டைகள் எடுக்கப்பட்டு, முதிர்ச்சியான முட்டைகளை துளையிட்டு, விந்து அணுக்களை, "இக்ஸி' முறையில் செலுத்தப்பட்டு, தரமான கருமுளைகள் உருவாக்கப்பட்டன.
அதில் இருந்து, 14வது நாளில் வாடகை தாயிடம், ரத்த பரிசோதனை மேற்கொண்டு, கருத்தறித்தது உறுதி செய்யப்பட்டது. ஒன்பது மாதம், வாடகை தாயின் உப்புசத்து, சர்க்கரை நோய் வராமல் பாதுகாத்து, 39வது வாரத்தில் பெண் குழந்தை பிறந்தது. வாடகை தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். இவ்வாறு, டாக்டர்கள் தெரிவித்தனர்.
Comments