புதுடில்லி: டில்லி சட்டசபையில் இன்று பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில்
ஜன் லோபால் மசோதா தாக்கல் செய்வேன் என்று அடம் பிடிக்கும் முதல்வர்
கெஜ்ரிவாலுக்கு எதிராக இன்று காங்., எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில்
ஈடுபட்டனர். தொடர்ந்து சபை வெளியே போராட்டம் நடத்தியதை அடுத்து காங்.,
மற்றும் பா.ஜ., எம். எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில்
விடுவிக்கப்பட்டனர்.
எந்தவொரு மசோதாவும், பார்லி., அனுமதிக்கு பின்னரே நடைமுறைக்கு
கொண்டுவரப்படும். ஆனால் டில்லி முதல்வர் சட்டசபையில் தாங்கள் விரும்பும்
லஞ்ச ஒழிப்பு ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார். இந்திய
அரசியில் சட்டமைப்பின் படி இது ஒத்து வராதது என்றும், இதற்கு மத்திய அரசு
அனுமதி வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று டில்லி சட்டசபை துவங்கியதும், பா.ஜ., காங்கிரஸ்
எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மக்கள்
எதிர்பார்ப்பை எதுவும் நிறைவேற்றவில்லை. என குற்றம் சாட்டினர். சட்ட
அமைச்சர் சோம்நாத் பார்தி ராஜினாமா ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற
முடியவில்லை எனில் தனது பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவிருப்பதாக
கூறப்படுகிறது.
ஜன் லோக்பால் கொண்டு வந்தால் காங்கிரஸ் தனது
ஆதரவை வாபஸ் பெறும் போது தானாக ஆட்சி கவிழும். இதில் மக்கள் பக்கம் எங்கள்
மீது தப்பில்லை என ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், தங்களின் நிலையை எவ்வாறு
விளக்கலாம் என டில்லி அரசியல் கட்சியினர் பாடம் படிக்க துவங்கி விட்டனர்.
ஜன் லோக்பால் கொண்டு வருவதற்காக தான் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும்
பயணிக்கவும், எதையும் இழக்க தயாராக இருப்பதாகவும் கெஜ்ரிவால்
கூறியிருந்தார் என்பது நினைவில் கூறத்தக்கது.
Comments