தங்கள் உத்தரவை மதித்து நடக்காத, நான்கு போலீஸ் அதிகாரிகளை, தற்காலிக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி,
அதிரடி சட்ட மந்திரி:
இந்நிலையில்,
டில்லி மாநில சட்ட அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய
நிர்வாகியுமான, சோம்நாத் பார்தி, தன் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பாலியல்
தொழில், போதை மருந்து கடத்தல் போன்ற முறைகேடுகள் நடப்பதாக, குற்றம்
சாட்டியிருந்தார்.இதை தடுப்பதற்காக, சமீபத்தில், நள்ளிரவில், தன்
கட்சியினர் சிலருடன் சேர்ந்து, அதிரடிச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது,
போதை மருந்து கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக, ஆப்பிரிக்க
நாடான, உகாண்டாவைச் சேர்ந்த, சில பெண்கள் மீது, அவருக்கு சந்தேகம்
ஏற்பட்டது. அவர்களை நள்ளிரவில், வலுக்கட்டாயமாக காரில் மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்று, சோதனையில் ஈடுபடுத்தினார். தன்னுடைய இந்த
நடவடிக்கைக்கு, டில்லி போலீசார், ஒத்துழைப்பு தரவில்லை என்றும், சோம்நாத்
பார்தி குற்றம் சாட்டினார்.
கவர்னரிடம் முறையீடு:
இதேபோல், டில்லி மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர்
ராக்கி பிர்லாவும், சில போலீசார் மீது, குற்றச்சாட்டுகளை சுமத்தினார். '
போலீஸ்காரர்கள், நான்கு பேரை உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்' என,
டில்லி மாநில கவர்னர் நஜீப், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே
ஆகியோரை சந்தித்து, கெஜ்ரிவால் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில்,
இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, இன்று முதல், உள்துறை
அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே வீடு முன், போரட்டம் நடத்தப் போவதாக,
கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.சின்ன விஷயத்திற்கு, டில்லி மாநில முதல்வரே,
போராட்டம் அறிவித்துள்ளது, டில்லி அரசியலில் பரபரப்பையும், பதற்றத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ., கிண்டல்:
இது
குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி
தலைவருமான, அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது:ஆம் ஆத்மி கட்சியினருக்கு,
நிர்வாக பணிகளை கவனிப்பதை விட, போராட்டங்களை நடத்துவதில் தான், அதிக ஆர்வம்
போலிருக்கிறது. அதனால் தான், உள்துறை அமைச்சர் வீட்டின் முன், போராட்டம்
நடத்தப் போவதாக, அறிவித்துள்ளனர். அரசாங்கம் நடத்துவது என்பது, கட்சி
நடத்துவதிலிருந்து, முற்றிலும் வேறுபட்ட விஷயம் என்பதை, அவர்கள் புரிந்து
கொள்ள வேண்டும்.இவ்வாறு, அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
போலீஸ் தடை:
இந்நிலையில்,
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, டில்லி போலீசார், தடையுத்தரவு
பிறப்பித்துள்ளனர். 'போலீஸ் அனுமதியின்றி, கூட்டம் கூடினாலோ, போராட்டம்
நடத்தினாலோ, அவர்கள் கைது செய்யப்படுவர்' என்றும் போலீசார்
தெரிவித்துள்ளனர். ஆனாலும், போலீஸ் தடையை மீறி, போராட்டம் நடத்த,
கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இதனால், அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக,
போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'கெஜ்ரிவால்
போராட்டத்துக்கும், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கும், எந்த
தொடர்பும் இல்லை. குடியரசு தினத்தை முன்னிட்டு தான், தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சோம்நாத் பார்திக்கு சிக்கல்:
தங்களிடம்
தரக்குறைவாக நடந்து கொண்டதாக, உகாண்டா பெண்கள், டில்லி மாநில சட்ட
அமைச்சர் சோம்நாத் பார்தி மீது, புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, இது
தொடர்பாக, அமைச்சர் சோம்நாத் பார்திக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்யும்படி, டில்லி போலீசாருக்கு, மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தேசிய மனித உரிமை ஆணையமும், விளக்கம் அளிக்கும்படி,
மத்திய அரசுக்கும், டில்லி அரசுக்கும் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கெஜ்ரிவால் வீடு முற்றுகை:
ஆம்
ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, பிரசாந்த் பூஷன், காஷ்மீர்
குறித்து தெரிவித்த கருத்துக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்து ரக்
ஷா தளம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு,
நேற்று போராட்டம் நடத்தினர். அதேபோல், தெலுங்கானா விவகாரம் குறித்து,
பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா
எதிர்ப்பாளர்கள், ஐதராபாத்தில் நேற்று பிரசாந்த் பூஷனை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர்.
Comments