புதுடில்லி:""ஊழல் தடுப்பு சட்டத்தை வலுவற்றதாக்க, மத்திய அரசு முயன்று
வருகிறது,'' என, டில்லி முதல்வரும், "ஆம் ஆத்மி' கட்சி தலைவர், அரவிந்த்
கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.
டில்லி மாநில அரசில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், ஊழியர்களை கண்டுபிடிக்க, பொது மக்களுக்கான, அவசர உதவி தொலைபேசி எண்களை முதல்வர், கெஜ்ரிவால் வெளியிட்டார்.
டில்லி மாநில அரசில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், ஊழியர்களை கண்டுபிடிக்க, பொது மக்களுக்கான, அவசர உதவி தொலைபேசி எண்களை முதல்வர், கெஜ்ரிவால் வெளியிட்டார்.
இது குறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:"ஹெல்ப்லைனுக்கு' தொடர்பு கொண்டு, லஞ்சம் வாங்குபவர்கள் குறித்த தகவல் சொன்னால், பாதிக்கப்பட்டவரே, புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம் கேட்டவரை ஆதாரத்துடன் சிக்கவைக்க வழிவகுக்கப்படும். லஞ்சத்தை ஒழிக்கும் இத்திட்டத்தில், ஒவ்வொரு குடிமகனும், ஊழலுக்கு எதிரான போராளி ஆவார். லஞ்சத்தை ஒழிக்க, டில்லி அரசு நடவடிக்கை எடுக்கும் போது, மத்திய அரசோ, ஊழல் தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில், தயக்கம் காட்டுகிறது. அதை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.ராஜ்ய சபாவில், தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் தடுப்பு சட்டத்தில், வலுவிழக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கு, அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தால், மக்கள் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாடம் கற்பிப்பர். அப்படி கட்சிகள் ஆதரித்தால், நாங்கள் தேசிய அளவில் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Comments