புதுடில்லி: ''மதச்சார்பின்மைக்கு எதிரான அழிவு சக்திகளிடமிருந்து,
நாட்டு மக்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும்,'' என, பிரதமர், மன்மோகன் சிங்
பேசினார். மாநில சிறுபான்மை கமிஷன் ஆணையர்களின் கூட்டம், நேற்று டில்லியில்
நடந்தது.
அதில், பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நாட்டிலுள்ள
சிறுபான்மை மக்களுக்கு, பாதுகாப்பு அளிப்பதில் அரசுக்கு பொறுப்பு உள்ளது.
இந்தியாவின் பலமே வேற்றுமையில் ஒற்றுமையில் தான் உள்ளது. இந்தியாவின்
மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் அழிவு சக்திகளுக்கு
எதிராக, மக்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியுள்ளது. பல மொழி பேசும்
மக்கள், மதம், கலாச்சாரம் என வேறுபட்டு இருந்தாலும், ஒன்றுபட்டு
இருப்பதுதான், இந்தியாவின் பலம். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார
மேம்பாட்டுக்கு, ஐ.மு., கூட்டணி அரசு சிறந்த முறையில் பணியாற்றி உள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், இதற்கான பலனை, சிறுபான்மையின மக்கள்
பார்த்துள்ளனர். இதற்கு உதாரணமாக, சச்சார் கமிட்டி அறிக்கையை சொல்லாம்.
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் சமூக பொருளாதாரம், கல்வி மேம்பாட்டுக்காக,
கமிட்டி வழங்கிய, 76 பரிந்துரைகளில், 72 ஏற்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பில்
முஸ்லிம்களுக்கு, இடமளிக்கும் விஷயம், கோர்ட்டில் உள்ளது. இவ்வாறு, பிரதமர்
பேசினார்.
Comments