ஆம் ஆத்மியின் எழுச்சி கண்டு நடுங்குகிறாரா நரேந்திர மோடி? காங். கேள்வி

ஆம் ஆத்மியின் எழுச்சி கண்டு நடுங்குகிறாரா நரேந்திர மோடி? காங். கேள்விடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி கண்டு குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நடுங்குகிறாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கோவாவில் பேசிய மோடி, ஆம் ஆத்மி தொலைக்காட்சிகளால் உருவான கட்சி என்று விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ்
கட்சியின் பொதுச்செயலரும் டெல்லி விவகாரங்களுக்கான செயலாளருமான ஷகீல் அகமது, காங்கிரஸ் மீதான மோடியின் விமர்சனத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது ஆம் ஆத்மியையும் கூட மோடி விமர்சித்து வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி கண்டு உண்மையிலேயே மோடி நடுங்குகிறாரா? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Comments