புதுடில்லி:'இணையத்தில், சமூக வலைதளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை
உடனடியாக வெளியிட்டு, அவதூறு பிரசாரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என, தேர்தல் கமிஷனை, காங்., கேட்டுக் கொண்டுள்ளது.
சமூக வலைதளம்:குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள், 'பேஸ்புக், டுவிட்டர்' உள்ளிட்ட, பல்வேறு சமூக வலைதளங்களில், பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்., சட்டத்துறை செயலர் கே.சி.மிட்டல்,
தேர்தல் கமிஷன் தலைவர் சம்பத்துக்கு எழுதிய கடிதத்தில்
கூறியிருப்பதாவது:தனிநபர்களும், குழு நபர்களும், சமூக வலைதளங்களில்,
கண்டனத்துக்குரிய வகையில், அரசியல் கட்சிகள், தலைவர்கள், கட்சிப்
பிரமுகர்கள் மீது, அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அது போன்ற நடவடிக்கைகள், பல்வேறு தண்டனைச் சட்டப் பிரிவுகளை மீறுவதாகும்.சமூக வலைதளம்:குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள், 'பேஸ்புக், டுவிட்டர்' உள்ளிட்ட, பல்வேறு சமூக வலைதளங்களில், பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகளவில் புகார்கள்:இதுகுறித்து, சமீபத்திய சட்டசபை தேர்தல்களின் போது, அதிகளவில் புகார்கள் வந்தன. ஆனால், போதுமான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுக்கவில்லை.
கடந்த, 2013, அக்., 25ல், தேர்தல் கமிஷன் விடுத்த சுற்றறிக்கையில், இந்த பிரச்னை தொடர்பாக, தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என, தெரிவித்திருந்தது. ஆனால், அதை கிடப்பில் போட்டு விட்டது.அதனால், சுமுகமான, முறையான தேர்தல்கள் நடக்க, உடனடியாக சமூக வலைதளங்களில், நடக்கும் அவதூறு பிரசாரங்களைத் தடுத்து நிறுத்த, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்திருந்தார்.
Comments