உடல் ஆரோக்கியமா இருக்க, ஜூஸை ட்ரை பண்ணலாமே!!!

உடல் ஆரோக்கியத்தில் பானங்களும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய ஜூஸில் பழங்களானாலும் சரி, காய்கறிகளானாலும் சரி, இரண்டிலுமே நிறைய புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அதனால் தான், திரையுலகினர், ஆரோக்கிய நிபுணர்கள் மற்றும் டயட்டில் இருப்போர் தினமும் ஒரு டம்ளர் பழம் அல்லது காய்கறி ஜூஸை குடிக்கிறார்கள். ஆனால் காய்கறி மற்றும் பழங்களால் செய்யப்படும் பானங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன. எப்படியெனில் பழங்களை ஜூஸரைப் பயன்படுத்தி செய்கின்றோம். காய்கறிகளை மிக்ஸரைப் பயன்படுத்தி தயாரிக்கின்றோம். அதிலும் சாதாரண காய்கறிகளால் தயாரிக்கப்படும் ஜூ1ல் நார்ச்சத்துக்கள் மட்டும் தான் நிறைந்திருக்கும். எனவே அவற்றை குடிப்பதற்கு பதிலாக, பச்சை இலைக் கீரைகளால் செய்யப்படும் ஜூஸில் நிறைய சத்துக்கள் உள்ளன. குறிப்பாக கலோரிகள் குறைவாகவும், வைட்டமின்கள் அதிகமாகவும் இருக்கும். ADVERTISEMENT ஜூஸ் தயாரிக்க பல கீரைகளைப் பயன்படுத்தலாம். அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி, பரட்டை கீரை (kale), பார்ஸ்லி (parsley) மற்றும் பழங்களில் கிவி மற்றும் மாங்காய் போன்றவற்றால் செய்யப்படும் ஜூஸில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. இதனை தினமும் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியத்துடன், எடையும் குறையும். இந்த மாதிரியான கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் குளோரோபில்லை தயாரிப்பதால், அவற்றை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலில் செரிமான மண்டலம் சீராக இயங்கி, புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் இந்த ஜூஸில் மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இவற்றை தினமும் குடிக்க, ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்களை எளிதில் பெறலாம். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின்களான வைட்டமின் ஏ, சி மற்றும் டி உள்ளது. இப்போது எந்த காய்கறி, கீரை மற்றும் பழங்களை வீட்டில் செய்து குடிக்கலாம் என்று பார்ப்போமா!!!

பாகற்காய் ஜூஸ்
 
அனைவருக்கும் பாகற்காய் ஜூஸ் என்றாலே வெறுப்பு ஏற்படும். ஏனெனில் அது மிகுந்த கசப்புத்தன்மையைக் கொண்டது. ஆனால் இந்த ஜூஸை குடித்தால், நீரிழிவு கட்டுப்படுவதோடு, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்துவிடும். ஒரு வேளை அளவுக்கு அதிகமான அளவில் கசப்பு தெரிந்தால், அதை தயாரிக்கும் போது, சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து செய்தால், கசப்புத் தன்மையை குறைக்கலாம்.

பசலைக் கீரை ஜூஸ்
 
இந்த கீரை ஜூஸ், டயட்டில் உள்ளோருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. எனவே ஒரு டம்ளர் பசலை கீரையை கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து வந்தால், உடல், சருமம், கூந்தல் மற்றும் கண்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும்.

கிவி ஜூஸ்
 
இந்த வகையான பழ ஜூஸில் மிகவும் டேஸ்ட்டாக இருக்கும். இந்த கிவி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், அனைவருக்கும் பிடித்த சுவையுடன் இருக்கும். எனவே இந்த ஜூஸ் செய்யும் போது, பாலை சேர்த்து செய்தால், போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீனை பெறலாம்.

ப்ராக்கோலி ஜூஸ்
 
இந்த பச்சை இலைக் காய்கறிகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நிறைய மக்கள் இந்த ப்ராக்கோலி ஜூஸை தினமும் குடித்து வருகின்றனர். இதனால் சருமம் பொலிவோடு இருப்பதோடு, புற்றுநோய் வராமலும் தடுக்கலாம்.

பார்ஸ்லி ஜூஸ்
 
பார்ஸ்லி கீரையை பச்சையாகவோ அல்லது அதனை ஜூஸ் போன்று செய்தோ சாப்பிடலாம். இந்த ஜூஸ் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, இரத்த சோகையை தடுத்து, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். இந்த ஜூஸை குடித்தால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மாங்காய் ஜூஸ்
 
கோடைக்காலத்தில் மாங்காய் சீசன் ஆரம்பமாகும். இந்த நேரத்தில் மாங்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் இந்த நேரத்தில் மட்டும் தான் நினைக்கும் போதெல்லாம் மாங்காய் சாப்பிட முடியும். எனவே அதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படாமல், சூரியக்கதிர்கள் சருமத்தை அதிகம் பாதிக்காமல் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய் ஜூஸ் 
 
உடல் எடை மற்றும் அழகான சருமம் வேண்டுமென்பவர்கள், தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், பெறலாம். இதனால் உடலில் செரிமானம் சரியாக நடைபெறுவதோடு, உடலில் இருந்து கழிவுகள் அகன்றுவிடும்.

பரட்டை கீரை
 
இந்த கீரையில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ, சி, ஈ, கே, கால்சியம், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், இது உடலுக்கும் சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தருகிறது.

அவகேடோ ஜூஸ்
 
அவகேடோவின் நன்மைகளை சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன? சருமம் அழகாக இருக்க ஆசைப்படுபவர்கள், தினமும் இதனை ஜூஸ் போட்டு குடித்தால், பெறலாம்.

Comments