நாடாளுமன்றத் தேர்தல்: அரசியலில் குதிக்க தேசிய கட்சிகளுக்கு தூது விடும் நடிகை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து விட வேண்டும் என்ற முனைப்பில் சம்பந்தப்பட்ட கட்சி தலைமைக்கு தூது விட்டு வருகிறார்களாம். ஏற்கனவே, கட்சியில் சேரப் போகிறார் என்ற பரபரப்பைக் கிளப்பினார் மச்சான் நடிகை. ஆனால், சூப்பர் ஸ்டைலில் நா எப்போ, எப்டி வருவேனு சொல்ல மாட்டேன் என ஜவ்வாய் அரசியல் பிரவேசத்தை இழுத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சில பிரபல நடிகர்கள் புதிய கட்சி ஒன்றில் சேரப் போவதாக தகவல் வெளியானது. நானே போய் ஆப்பு வச்சுக்குவேனா என்ற ரேஞ்சுக்கு மறுப்பு தெரிவித்தார்கள் சம்பந்தப்பட்ட நடிகர்கள். இந்நிலையில், லட்சுமிகரமான நடிகை ஒருவர் நான் அரசியலுக்கு வருவேன். ஆனால் எந்த கட்சியில் சேருவது என்பது பற்றி இன்னும முடிவெடுக்கவில்லை என்று கூறி தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தியுள்ளாராம். இதையடுத்து, அந்த நடிகை எந்த கட்சியின் மீது ஈடுபாடாக இருக்கிறார் என்று விசாரித்தபோது, எந்த கட்சி மீதும் அவருக்கு தனிப்பட்ட ஈடுபாடு கிடையாது. யார் தன்னை சேர்த்துக்கொள்வார்களோ அதுதான் அவருக்கு பிடித்தமான கட்சியாக இருக்கும். அந்த வகையில் இரண்டு தேசிய கட்சிகளுக்கு தூது அனுப்பிவிட்டு அவர்களின் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார் எனத் தெரிய வந்துள்ளது.

Comments