கனிமொழி, ராஜா மீது நடவடிக்கை

புதுடில்லி : மத்திய அமலாக்க இயக்குனரக வட்டாரங்கள் கூறியதாவது:'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆகியோர், பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டதாக, மத்திய அமலாக்க பிரிவினர் சார்பில், அவர்கள் மீது, விரைவில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பான, அமலாக்கத் துறையின் அறிக்கையை, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆய்வு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.இவ்வாறு, அமலாக்க பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments