'ஜில்லா' படத்திற்கு தடை கோரியவர் மீது மர்ம கும்பல் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி

'ஜில்லா' படத்திற்கு தடை கோரியவர் மீது மர்ம கும்பல் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதிசென்னை: ஜில்லா படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவரை மர்ம கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
 
இந்நிலையில் மகேந்திரன் தனது வழக்கறிஞரை சந்தித்துவிட்டு வீடு திரும்பியபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதில் மகேந்திரனின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் வடபழனி சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைவா படம் பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு வெளியானதால் ஜில்லா எந்த பிரச்சனையும் இன்றி வெளியாக வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். இந்நிலையில் தான் ஜில்லாவுக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments