எஸ்.எம்.எஸ்., மூலம் ஆள் சேர்ப்பு : அமேதியில் "ஆம் ஆத்மி' கட்சி அதிரடி

அமேதி: உத்தர பிரதேச மாநிலம், அமேதியில், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளது. எஸ்.எம்.எஸ்., - இ-மெயில் மூலமாக உறுப்பினர்கள், தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ள, பிரத்யேக மொபைல் எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

டில்லியில் ஆட்சியமைத்து உள்ள ஆம் ஆத்மி கட்சி, அடுத்ததாக லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
அக்கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ், ராகுலின் தொகுதியான அமேதியில், லோக்சபா தேர்தலில் ராகுலை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால், அமேதியில் தொடர்ந்து, தீவிர பிரசாரம் செய்து வரும் விஸ்வாஸ், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் செயலில் ஈடுபட்டு உள்ளார்.

பிரசாரம் துவக்கம் : இதற்காக, இம்மாதம், 12ம் தேதி முதல், அமேதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க, அக்கட்சி யினர் புதிய நடைமுறைகளை கையாளத் துவங்கி உள்ளனர். அவ்வகையில், எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, விசேஷ மொபைல் எண்கள், இ-மெயில் முகவரிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. கட்சியில் சேர விரும்பும் நபர்கள், மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், இ-மெயில் செய்தும் தங்களை உறுப்பினர்கள் ஆக்கிக் கொள்ளலாம் என, ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

50 ஆயிரம் பேர் சேர்ப்பு : இதுவரை, 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டுள்ளதாகவும், 26ம் தேதிக்குள், 1 லட்சம் உறுப்பினர் களை சேர்க்க திட்டமிட்டுள்ளதா கவும், ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான, ஹரிகேஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

Comments