கேப்டன் டிவியில் பொங்கல் ஸ்பெஷலாக 'அம்மா' நடித்த கந்தன் கருணை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கேப்டன் டிவியில் பொங்கல் ஸ்பெஷலாக நாளை மதியம் முதல்வர் ஜெயலலிதா நடித்த கந்தன் கருணை படம் ஒளிபரப்பாகிறது.
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் இன்று முதலே சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பண்டிகை கொண்டாடும் ரசிசகர்களை குஷிபடுத்த தொலைக்காட்சி சேனல்களில் பல புதிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.


பொங்கல் பண்டிகையான நாளை எந்தெந்த சேனல்களில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன என்பதை பார்ப்போம்.

சன் டிவி

முன்னணி தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான தலைவா படம் நாளை பொங்கல் விருந்தாக ஒளிபரப்பப்படுகிறது.

கலைஞர்

கலைஞர் டிவியில் சிவகார்த்திகேயன், பரோட்டா சூரி நடிப்பில் வந்த காமெடி படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் நாளை ஒளிபரப்பப்படுகிறது.

ராஜ் டிவி

விஷால் நடிப்பில் அண்மையில் வெளியாகி ஹிட்டான பாண்டிய நாடு படத்தின் சேட்டிலைட் உரிமத்தை ராஜ் டிவி வாங்கியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக நாளை ராஜ் டிவியில் பாண்டிய நாடு படம் ஒளிபரப்பப்படுகிறது.

விஜய் டிவி

விஜய் டிவியில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி ஹிட் படம் நாளை பொங்கல் விருந்தாக வருகிறது.

கேப்டன் டிவி

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான கேப்டன் டிவியில் முதல்வர் ஜெயலலிதா நடிப்பில் 1967ல் ரிலீஸான கந்தன் கருணை படம் பொங்கல் சிறப்பு படமாக நாளை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. தேமுதிக, அதிமுக கூட்டணி அமைத்து பின்னர் கூட்டணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டு ஒருவரையொருவர் குற்றம் கூறி வரும் நிலையில் கேப்டன் டிவியில் கந்தன் கருணை படம் ஒளிபரப்பப்படுவது பலரையும் வியக்க வைத்துள்ளது.

Comments