சென்னை மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த காண்காட்சியானது ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.
மொத்தம் 7 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த போட்டியில் சொல் பேச்சு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் நாய்கள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 365 நாய்கள் கலந்து கொண்டன. மொத்தம் 45 இன வகை நாய்கள் பங்கேற்றன.
இதில் நமீதாவின் சொக்லேட் நாயும் கலந்து கொண்டு தனது திறமையை
வெளிக்காட்டியது. இந்த நாயானது அங்கு வந்திருந்த அனைத்து ரசிர்களையும்
கவர்ந்திழுத்துவிட்டது.
அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தனது வீட்டு செர்பியன் ஹஸ்கி நாயுடன் வந்திருந்தார்.
இந்த நாய்களுக்கு நிகராக தமிழ்நாட்டு நாய்களான ராஜபாளையம்,கோம்பை, சிப்பிப்பாறை வேட்டை நாய்கள்தான் பார்க்கவே மிரட்டலாக இருந்தன.
Comments