அமேதியில் காந்தி குடும்பத்தை யாராலும் வெல்ல முடியாது: மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லா

அமேதியில் காந்தி குடும்பத்தை யாராலும் வெல்ல முடியாது: மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லாடெல்லி: அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், அமேதி தொகுதிக்கு காந்தி குடும்பம் செய்த சேவை மற்றும் இத்தொகுதி மக்கள் இந்த குடும்பத்திற்கு அளித்துள்ள ஆசியை வைத்து பார்க்கையில் இங்கு வேறு யாராலும் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்றார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் வரும் லோக்சபா தேர்தலில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குமார் விஷ்வாஸ் போட்டியிடுகிறார். இதற்கு தான் ராஜிவ் சுக்லா அவ்வாறு தெரிவித்துள்ளார். அமேதியில் பேரணி ஒன்றில் கலந்து கொள்ள வந்த விஷ்வாஸுக்கு எதிராக கோஷமிட்ட மக்கள் கருப்புக் கொடியும் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பேரணியில் பேசிய விஷ்வாஸ் இளவரசருக்கு(ராகுல்) பதிலாக சாதாரண மனிதருக்கு வாக்களியுங்கள் என்று மக்களை கேட்டுக் கொண்டார்.

Comments