தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர
மோடியை அறிவித்த பிறகு பாஜக எதியூரப்பாவை அணுகியது. இம்முறை நடந்த
பேச்சுவார்த்தை வெற்றி பெற்ற பிறகு எதியூரப்பா தனது கட்சியை கடந்த வாரம்
பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவர் கட்சியில் முறைப்படி இணைய ஒரு தேதியை
முடிவு செய்யுமாறு அவருக்கு பாஜக கோரிக்கை விடுத்தது.
அதன்படி அவர் இன்று பாஜகவில் தன்னை முறைப்படி இணைத்துக் கொள்கிறார். அவர்
பாஜகவில் மாண்டும் இணைந்தாலும் வரும் லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட
மாட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments