சிறுவனுடன் மாயமான சிறுமி: 4 மாத கர்ப்பிணியாக மீட்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 15 வயது சிறுவனுடன் ஒடிப்போன சிறுமி 4 மாத கர்ப்பிணியாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி(16). இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர்.


இந்நிலையில் கடந்த 7 ம் திகதி இருவரையும் காணவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் பொலிசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

பொலிஸ் விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே எம்.கே.பி. நகர் பொலிசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பொலிசாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று முதல் நீதிமன்றத்துக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.

Comments