டிரா ஆனது 3வது ஒருநாள் கிரிக்கெட்

ஆக்லாந்து : இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது. 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது.
கடைசி நிமிடம் வரை த்ரிலாக சென்ற போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்துள்ளது. இந்திய தரப்பில் தோனி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

Comments