புதுடில்லி : மின் உற்பத்தி, விநியோகம் போன்ற பொதுப் பணித்துறைகளுக்கு
போதிய நிதி ஒதுக்கப்படாததால் பிப்ரவரி மாதம் முதல் கிழக்கு டில்லியில்
தினமும் 10 மணிநேர மின்தடையை அமல்படுத்த உள்ளதாக டில்லி மின்வாரியம்
அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரிலையன்ஸ் டிஸ்காம் நிறுவனம் டில்லி
அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. மின் உற்பத்தி மையங்கள்
விரிவுபடுத்தப்படாததால் 500 மெகாவாட் வரை மின்இழப்பு ஏற்படுவதாகவும் அந்த
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை காரணமாக மின்துறை
பாக்கிகளை செலுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனவும் மின்துறை
கேட்டுள்ளது.
Comments