மூழ்கும் கப்பலை காப்பாற்ற முயற்சி ; வரும் ஜன-17ம் தேதி காங்., கூடுகிறது

புதுடில்லி: சமீபத்திய தேர்தல் தோல்வி, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடியின் விஸ்வரூப வளர்ச்சி, தி.மு.க., வெளியேறல், தலைநகர் டில்லியில் ஆட்சி இழப்பு உள்ளிட்ட தொடர் சரிவுகளால் மூழ்கி கொண்டிருக்கும் காங்., கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான காங்., கமிட்டி கூட்டம் வரும் ஜனவரி 17ம் தேதி கூடுகிறது. 
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜ.,வுக்கு பெரும் வெற்றி கிட்டியது.
இதற்கு மோடியின் சூறாவளி பிரசாரம் என்றும், இவருக்கான செல்வாக்கு இந்தியா முழுவதும் வளர்ந்து வருவதையே காட்டுகிறது. காங்கிரஸ் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் தருணம் என்றும், தங்களின் நிலையை மாற்றிக்கொள்வோம் என்றும் சோனியாவும், ராகுலும் நிருபர்களிடம் தெரிவித்தனர். குறிப்பாக நேற்று முளைத்த ஆம்ஆத்மி கட்சியிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டியுள்ளது என்றும் ராகுல் கூறியிருந்தார்.


இந்நிலையில் கட்சியில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைள், மாற்றங்கள் குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் . குறிப்பாக வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நிர்ணயிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஏறக்குறைய ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என காங்., மூத்த நிர்வாகிகள கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments