சொன்னபடி ரயிலில் பயணம் செய்து அலுவலகம் போனார் அமைச்சர் வீரப்ப மொய்லி!

சொன்னபடி ரயிலில் பயணம் செய்து அலுவலகம் போனார் அமைச்சர் வீரப்ப மொய்லி!டெல்லி: பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணித்தார். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதன் பயன்பாட்டை பொது மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை வீரப்ப மொய்லி வலியுறுத்தி வருகிறார். அத்துடன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் அலுவலகத்துக்குச் செல்ல பொது போக்குவரத்தை பயன்படுத்த இருப்பதாகவும் வீரப்ப மொய்லி கூறியிருந்தார். அதன்படி இன்று காலை டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்து மொய்லி தமது அலுவலகத்துக்குச் சென்றார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த பயணம் மகிழ்ச்சியளிக்கிறது. இதனை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Comments