நஸ்ரியா தொப்புள் பரபரப்புக்குப் பின்னணியில் தனுஷ்?

நஸ்ரியா தொப்புள் பரபரப்புக்குப் பின்னணியில் தனுஷ்?சென்னை: கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு, கமிஷனர் ஆபீஸ், கோர்ட் என வில்லங்கமாகி வரும் நஸ்ரியா விவகாரத்தை பின்னிருந்து இயக்குபவர் படத்தின் ஹீரோ தனுஷ்தான் என்ற பேச்சு கிளம்பியுள்ளது கோடம்பாக்கத்தில். ஒய் திஸ் கொல வெறி என்ற ஒரு பாட்டுக்கு உலகம் முழுக்க பரபரப்பு கிளம்பியதல்லவா... அந்தப் பரபரப்பு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதானாம். மும்பையில் உள்ள பிரபல விளம்பர ஏஜென்சி மூலம் இந்த வேலையைச் செய்தாராம் தனுஷ். அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கான பப்ளிசிட்டியையும் இந்த விளம்பர நிறுவனத்தின் பொறுப்பிலேயே விட்டுவிட்டாராம் தனுஷ். அவர் என்ன மாதிரி உடை அணிய வேண்டும், எப்போது பட்டு வேட்டி சட்டை போட வேண்டும், எப்போது ஜிப்பா போட வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பது இந்த விளம்பர நிறுவனம்தானாம். இனி தன் படங்களின் செய்திகளைக் கூட வழக்கமான பிஆர்ஓ மூலம் தராமல், அந்த விளம்பர நிறுவனம் மூலம்தான் தரப்போகிறாராம். இந்தப் பாணியை தனக்கு ஜோடியாக நடித்த நஸ்ரியாவுக்கும் அறிமுகப்படுத்தினாராம் தனுஷ். 'ஒய் திஸ் கொல வெறிக்கு நிகரான விளம்பரம் இந்த தொப்புள் மேட்டருக்குக் கிடைக்கும்... அந்த விளம்பர ஏஜென்சியை வைத்து அனைத்தையும் செய்' என்று வழி காட்டியதாக பேசிக் கொள்கிறார்கள். நிஜமாவா தனுஷ்...!

Comments