
ராஞ்சி: ராஞ்சி சிறைக்குள் பீகாரின் முன்னாள் முதல்வரும், ரஷ்டீரிய
ஜனதா தளத் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் நவராத்திரி பூஜைகள் மேற்கொண்டு
வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகாரின் முதலமைச்சராக இருந்த காலத்தில் ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் லல்லு
பிரசாத் யாதவ் மாட்டுத்தீவணம் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக
சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில், லல்லுவுக்கு 5
ஆண்டு சிறைதண்டனை விதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அவர் ராஞ்சி
பிர்சா முண்டா சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக, லல்லு பிரசாத் யாதவ் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பூஜைகளில்
கலந்துகொள்வார். ஆனால், தற்போது சிறைக்குள் இருப்பதால் தனது பூஜை வழக்கம்
பாழாகி விடக் கூடாது என நினைத்த லல்லு, சிறை வளாகத்திற்குள்ளேயே நவராத்திரி
பூஜைகள் மேற்கொண்டு வருகிறாராம்.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா பூஜைகளில், லல்லு இதுவரை
நான்கு நாள் பூஜையை நிறைவேற்றி உள்ளதாகவும், இன்று ஐந்தாம் நாள் பூஜை
எனவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments