ஊடுருவல்
:பா.ஜ.,
தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்,சண்டிகாரில்,கூறியதாவது:பாகிஸ்தான் ராணுவம்,
நம் வீரர்கள் மீது, தாக்குதல் நடத்துகிறது.
பயங்கரவாதிகளை, நம்
எல்லைக்குள்ஊடுருவ வைக்கிறது இதனால், எல்லை பகுதியில், தொடர்ந்து பதற்றம்
நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்காவுக்கு செல்லும், பிரதமர்
மன்மோகன் சிங், அங்கு, பாக்., பிரதமருடன் பேச்சு நடத்தவுள்ளதாக, செய்திகள்
வெளியாகியுள்ளன. இது, சரியான நடவடிக்கை அல்ல.இரு நாடுகளுக்கும் இடையே,
ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே, பாக்.,குடன் பேச்சு நடத்த வேண்டும்.
மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, ‘இனிமேல், பாகிஸ்தானுடன்
பேச்சுவார்த்தை கிடையாது’ என, பிரதமர் அறிவித்தார்.இப்போது, தன் நிலையை,
அவர் மாற்றியது ஏன்? எல்லையில், பலமுறை பாக்., ராணுவம், அத்துமீறி
தாக்குதல் நடத்தியும், நாம், அதற்கு சரியான பதிலடி கொடுக்கவில்லை. இந்த
பிரச்னைக்கு, போர் மட்டுமே தீர்வு என, நான் கூறவில்லை.தூதரக ரீதியாகவும்,
சர்வதேச நாடுகள் வழியாகவும், பாக்.,கிற்கு ஏன் நெருக்கடி கொடுக்கவில்லை
என்று தான், கேட்கிறேன்.
மத்திய குழு முடிவு:
லோக்சபா
தேர்தலின் போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எந்தத்
தொகுதியில் போட்டியிடுவார் என்பதை, கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவு
செய்யும். அவர் குறிப்பிட்ட தொகுதியில்தான் போட்டியிடுவார் என, தனிப்பட்ட
நபர்கள் யாரும் தெரிவிக்க முடியாது.இவ்வாறு, ராஜ்நாத் சிங் கூறினார்.
Comments