மோடி இன்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள சிறப்பு
பேட்டியில் ; நான் இதுவரை யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யவில்லை. ‘ நான்
பிறப்பால் இந்து. இது தவறு இல்லை ’- நான் இந்தியன் இதில் தவறு இல்லை. அதே
நேரத்தில் எனக்கு தேப்பற்றும் முக்கியம். ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும்
தேப்பற்றை போதிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியும் முக்கியம் என
கருதுகிறேன். எனது கட்சியில் யாரும் என்னை சிக்கல் ஆனவன் என்று
சொல்லவில்லை.
2002 ல் நடந்த குஜராத் கலவரத்தை நான் அடக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். இந்த க லவரம் எனக்கு பெரும் கவலையை தந்தது.
சுப்ரீம் கோர்ட் அமைத்த சிறப்பு புலனாய்வு படையினர் கூட என்னை
குற்றமற்றவன் என தெரிவித்து இருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை.
நாய் மீது கார் :
நான்
காரி்ன் பின் சீட்டில் உட்கார்ந்து போகும் போது கூட தெருவில் சென்ற ஒரு
நாய் காருக்கு அடியில் வந்தால் கூட நான் பெரும் கவலைப்படுவேன். நான்
முதல்வராக இருந்தாலும் எனக்கு அந்த உணர்வு உண்டு. மனித நேயம் எனக்கு
முக்கியம். இயற்கை மற்றும் மனிதநேய மீறல் செயல்கள் எங்கு நடந்தாலும் எனது
மனம் கவலைப்படும்.
ஓட்டுக்காக நான் கவலைப்பட்டதில்லை. பெரிய பதவிக்கு ஆசைப்படவில்லை.
ஓட்டுக்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை நான் பிரித்து பார்க்கும்
எண்ணம் எனக்கு இல்லை. பிரிவினை எனக்கு பிடிக்காது. இந்தியா ஜனநாயக நாடு.
அனைவரும் அனைத்தும் பெற வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்
சமாஜ்வாடி கட்சி :
இதற்கிடையில்
மோடியின் பேட்டி குறித்து காங்கிரஸ் குறை கூறியிருக்கிறது. இவரது
பேட்டியில் தவறு எதுவும் இல்லை என்றும் இதை தவறாக சித்தரிக்கும்
முயற்சியில் யாரும் இறங்க வேண்டாம் என்றும் பா.ஜ., செய்தி தொடர்பாளர்களில்
ஒருவரான நிர்மலா சீத்தாராம் கேட்டுக்கொண்டுள்ளார். சமாஜ்வாடி கட்சி
சார்பில்,மோடி பேச்சு மூலம் அவரது சுயரூபம் வெளிப்பட்டுள்ளது என
விமர்சித்துள்ளது.
Comments