புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வரும் உணவு பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்க
தி.மு.க., முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டில்லியில்
பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.
இளங்கோவன், உணவு பாதுகாப்பு மசோதாவால் ஏழை மக்களுக்கு
பலன் கிடைக்கும்.
அந்த மசோதாவை தி.மு.க., எதிர்க்காது. அந்த மசோதாவில் சில மாற்றங்கள் செய்ய
வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். இருப்பினும், உணவு பாதுகாப்பு மசோதா
பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் போது, அதற்கு தி.மு.க, ஆதரவளிக்கும்
என கூறினார்.
Comments