நடிகை மஞ்சுளா விஜயகுமார் மரணம்

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்த நடிகையுமான மஞ்சுளா(வயது 60) மரணம் அடைந்தார். சென்னை, ஆலப்பாக்கத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வந்த மஞ்சுளா, தனது வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து சென்னை, போரூரில் உள்ள தனி யார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டர்.


1953-ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி பிறந்தவர் நடிகை மஞ்சுளா. 1969ம் ஆண்டு சாந்தி நிலையம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானவர் நடிகை மஞ்சுளா. பின்னர் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை உள்ளிட்ட பல படங்களிலும், சிவாஜியுடன் டாக்டர் சிவா, அன்பே ஆருயிரே உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி தவிர ரஜினி, கமல், ஆகியோரது படங்களிலும், தெலுங்கில் சோமன் பாபு, அக்கினி நாகேஸ்வரராவ் உள்ளிட்டவர்களின் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உன்னிடம் மயங்கினேன் படத்தில் நடிகர் விஜயகுமார் உடன் நடித்தபோது, அவருடன் காதல் வயப்பட்டார். விஜயகுமார் ஏற்கனவே திருமணமானவர் ஆன போதும் அவரையே திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியருக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவர்களும் சினிமாவில் இருக்கின்றனர்.

மறைந்த மஞ்சுளாவின் மறைவுக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
யார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜூலை 23ம் தேதி) இறந்தார்.

Comments