தமிழக பிரபல ஓட்டல்களில் ஐ.டி.,ரெய்டு ; அதிக சொத்து சேர்த்ததாக வந்தது புகார்

சென்னை: தமிழகத்தின் பிரபல ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஓட்டல் அதிபர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வருவதாக புகார் வந்ததை அடுத்து இந்த ரெய்டு நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புன்னைநகரில் பண்ணை வீடு : சென்னையில் பிரபல ஓட்டல் சரவணபவன் மற்றும் அடையாறு ஆனந்தபவன் ஓட்டல் முதலாளிகள், அவர்களுக்கு சொந்தமான விடுதிகள் ஆகியவற்றில் ரெய்டு நடந்து வருகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே புன்னைநகரில் உள்ள சரவணபவன் அதிபர் ராஜகோபால் பண்ணை வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.

இது போன்று மதுரை, தூத்துக்குடி, டில்லி, பெங்களூர், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் உள்ள சரவணபவன் ஓட்டல்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. இங்குள்ள வருமான வரி மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படுகிறது.



300 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் :
முறையான வரி செலுத்தாமை , அதிகபடியான விலை, சொத்து வாங்கி குவித்தது உள்ளிட்ட புகார் வந்தது. இதன் எதிரொலியாக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. மொத்தம் 300 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டில் ஈடுபட்டனர்.

Comments