மீரட்: பிளஸ் 2 மாணவியை காரில் கடத்தி, பாலியல்பலாத்காரம் செய்த சம்பவம்,
மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம்,
மீரட்டை சேர்ந்த, 17 வயது மாணவி, இங்குள்ள பள்ளியில், பிளஸ் 2 படித்து
வருகிறார். கடந்த சனிக்கிழமை, டியூஷனுக்காக, மாணவி,தன் வீட்டில் இருந்து
சென்ற போது, அந்த வழியாக,காரில் வந்த நான்கு பேர்,
அவரை கடத்தினர்.
பின்,அவரை, காரிலும், மறைவான ஒரு இடத்திலும், பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதையடுத்து, வணிகவளாகம் ஒன்றில், அவளை இறக்கி விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், போலீசில் புகார்
அளித்தனர். வழக்கு பதிந்தபோலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மாணவியை
பலாத்காரம் செய்த நபர்களில் ஒருவர், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை
சேர்ந்தவர்.
Comments