
மும்பையில் கே.இ,எம்., மருத்துவமனை எதிரே ஆதித்தி பியூர் வெஜ் என்ற ஓட்டல்
நடந்து வருகிறது. இதன் உரிமையாளர், காங்கிரஸ் அரசு குறித்து தனது
விமர்சனத்தை பில்லில் தெரிவித்துள்ளார்.
அந்த பில்லில் கூறப்பட்டிருந்த
விமர்சனம் வருமாறு: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பணம் தின்பதாக
இருந்தால் ( 2ஜி ,நிலக்கரி, கமான்வெல்த் விளையாட்டு ஊழல் மூலம் )
அவசியமானது. ஆனால் ஏ.சி., ஓட்டல்களில் சாப்பிடும் வகை ஆடம்பரம் ஆகும்.
இவ்வாறு மத்திய அரசின் வரி விதிப்பை கண்டித்து அச்சடித்துள்ளார்.
அவதூறு பரப்புவதாக வழக்கு:
இந்த தகவல் இப்பகுதியை சேர்ந்த காங்., தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
இதனையடுத்து மும்பை காங்., தலைவர் கணேஷ்குமார் யாதவ் தலைமையில் காங்.,
தொண்டர்கள் இந்த ஓட்டல் முன்பு கூடினர். ஓட்டலுக்கு எதிராக கோஷம்
எழுப்பினர். தொடர்ந்து கடையை அடைத்தனர்.
மேலும் அவதூறு
பரப்புவதாக காங்., தரப்பில் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் 501
செக்சன் படி வழக்கு பதிவு செய்தனர். ஓட்டல் அதிபர் அச்சடித்த வாசகம் மும்பை
முழுவதும் அரசியல் பிரமுகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments