சென்னை: தமிழக அரசுக்கு எதிரான திமுகவின் கருப்பு சட்டை அணிந்து மாநிலம்
முழுவதும் திமுக நாளை நடத்த திட்டமிட்டிருந்த மனித சங்கிலிப்
போராட்டத்துக்கு பல மாவட்டங்களில் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை.
இதையடுத்து அந்தப் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது
தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகையிலும்
செயலிழந்துவிட்ட அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து
சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் நாளை (5ம் தேதி) மாலை 2 மணி முதல் 6
மணி வரை கறுப்பு உடை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்த திமுக
செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்காக காவல்துறை
அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் அனுமதி வழங்கவில்லை. சில
மாவட்டங்களில் அனுமதி மறுத்து விட்டனர். காவல்துறையை தூண்டி விட்டு சட்டம்
ஒழுங்கு பிரச்சினையை சிக்கலாக்கி பொதுமக்களை சோதனைக்கும், வேதனைக்கும்
ஆளாக்கும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது.
இந்த வன்முறையில்
இருந்து பொதுமக்களை காத்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னையில் நாளையும்
மற்ற மாவட்டங்களில் 6 அல்லது 7ம் தேதிகளில் நடக்க இருந்த மனித சங்கிலி
போராட்டத்துக்கு பதிலாக கறுப்பு உடை அணிந்து துண்டு பிரசுரங்கள் மூலமாக
இந்த ஆட்சியின் அவலங்களை வீடு வீடாக வினியோகம் செய்ய வேண்டும் என்று
கூறப்பட்டுள்ளது.
Comments