அரவிந்த் கேஜ்ரிவால் சரமாரியாக ஊழல் புகார்
சுமத்தியுள்ள நிலையில், லண்டன் போயிருந்த குர்ஷித் இன்று டெல்லி
திரும்பினார். பிற்பகலில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து தன் தரப்பு
விளக்கத்தை அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மாற்றுத்
திறனாளிகளுக்கான முகாம்கள் நடத்தப்படவில்லை என்று சில முட்டாள்கள்
கூறுகின்றனர். நான் தான் அந்த முகாம்களைத் தொடங்கி வைத்தேன். என்னுடைய
சகாக்கள் மற்ற முகாம்களைத் தொடங்கி வைத்தனர்.
முகாம்களை நடத்தாமலேயே
போலியான் ஆவணங்கள் மூலம் பணத்தை அபகரித்ததாக கூறுவது அற்பத்தமானது. அப்படி
என் மீது கூறப்படும் புகார்கள் உண்மை என்று அவர்கள் நிரூபித்தால் மத்திய
அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்றார் அவர்.
Comments